ஒவ்வொரு அநீதியைக் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயனால், நீ எனது தோழன்.-சேகுவேரா

Saturday, June 13, 2015



ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை

ஜூன் 12-ந் தேதி சென்னையில் மாநில நிர்வாகத்துடன் நடைபெற்றது. தொழிற்சங்கத்தின் சார்பில் நமது மாநில செயலர் தோழர்.பட்டாபி, துணை செயலர் தோழர்.முரளி, TMTCLUமாநில பொதுச்செயலர் தோழர்.R.செல்வம், BSNLEU மாநில செயலர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன், BSNLEU மாநில தலைவர் தோழர்.S.செல்லப்பா, TNTCWU மாநில துணைத்தலைவர் தோழர்.பழனிசாமி ஆகியோரும், நிர்வாகத்தின் சார்பில் திரு.ரெட்டி-CGM, திரு.ரவி-PGM(Fin), திருமதி.பூங்குழலி-PGM(O), திரு.ரவிபாபு-GM (HR), திரு.ராஜி-DGM(Admn)ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர். முடிவில் கீழ்க்கண்ட நமது கோரிக்கைகளை ஏற்று உத்திரவாதம் அளித்துள்ளது.

  • ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க உத்தரவாதம்,
  • ஜூலை இறுதிக்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை விரைவில் வழங்க ஒப்பந்தகாரர்களிடம் அறிவுறுத்தப்படும்.
  • மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக EPF பிடித்தம் செய்யப்பட்டு. பிடித்தம் செய்யப்பட்ட  EPF அந்த அந்த மாவட்டத்தில் உள்ள EPF அலுவலகத்தில் கட்டப்படவேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் EPF அலுவலகம் இல்லை யென்றால் அருகிலுள்ள EPF அலுவலகத்தில் செலுத்தப்படவேண்டும் என ஒப்பந்தகாரர்களிடம் வலியுறுத்தப்படும்.
  • ESI கார்டு வழங்கப்படாத மாவட்டத்தில் உடனடியாக வழங்க உத்திரவாதம் வழங்கியது.
  • ஒப்பந்தகாரர் போட்ட உடன்பாட்டின்படி மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி போனஸ் வழங்கப்பட உத்தரவிடப்படும்.
  • மாவட்ட மட்டத்தில் தனி அதிகாரி நியமிக்கப்படுவார்,

இதுபற்றிய விரிவான சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில 

நிர்வாகத்தால் அனுப்பப்படும்.

தோழமையுடன்!

R.செல்வம்

TMTCLU பொதுசெயலர்  

No comments:

Post a Comment