ஒவ்வொரு அநீதியைக் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயனால், நீ எனது தோழன்.-சேகுவேரா

Wednesday, September 28, 2016

முப்பெரும் விழா-கிருஷ்ணகிரி

இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கிருஷ்ணகிரிBSNLEU கிளைச் சங்கத்தை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட நிரந்தர தோழர்களும், TNTCWU சங்கத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் விலகி நமது NFTE,TMTCLU இணைந்துள்ளனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.


முப்பெரும் விழாவில் தோழர்கள் பட்டாபி, தோழர் சேது, மாநில தலைவர் தோழர் காமராஜ், மாநில செயலர் தோழர் நடராஜன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (வி.தொ.ச) தேசிய குழு உறுப்பினர் தோழர் V.கிருஷ்ணமூர்த்தி, மூத்தத் தோழர் S.தமிழ்மணி, TMTCLU மாநில பொதுச்செயலர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மற்றும் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும் TMTCLU மாவட்டத் தலைவர் M.S.குமார் , NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர் DK, GM அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் , A.C. முகுந்தன் மாவட்ட அமைப்புச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Saturday, June 13, 2015ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை

ஜூன் 12-ந் தேதி சென்னையில் மாநில நிர்வாகத்துடன் நடைபெற்றது. தொழிற்சங்கத்தின் சார்பில் நமது மாநில செயலர் தோழர்.பட்டாபி, துணை செயலர் தோழர்.முரளி, TMTCLUமாநில பொதுச்செயலர் தோழர்.R.செல்வம், BSNLEU மாநில செயலர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன், BSNLEU மாநில தலைவர் தோழர்.S.செல்லப்பா, TNTCWU மாநில துணைத்தலைவர் தோழர்.பழனிசாமி ஆகியோரும், நிர்வாகத்தின் சார்பில் திரு.ரெட்டி-CGM, திரு.ரவி-PGM(Fin), திருமதி.பூங்குழலி-PGM(O), திரு.ரவிபாபு-GM (HR), திரு.ராஜி-DGM(Admn)ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர். முடிவில் கீழ்க்கண்ட நமது கோரிக்கைகளை ஏற்று உத்திரவாதம் அளித்துள்ளது.

  • ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க உத்தரவாதம்,
  • ஜூலை இறுதிக்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை விரைவில் வழங்க ஒப்பந்தகாரர்களிடம் அறிவுறுத்தப்படும்.
  • மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக EPF பிடித்தம் செய்யப்பட்டு. பிடித்தம் செய்யப்பட்ட  EPF அந்த அந்த மாவட்டத்தில் உள்ள EPF அலுவலகத்தில் கட்டப்படவேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் EPF அலுவலகம் இல்லை யென்றால் அருகிலுள்ள EPF அலுவலகத்தில் செலுத்தப்படவேண்டும் என ஒப்பந்தகாரர்களிடம் வலியுறுத்தப்படும்.
  • ESI கார்டு வழங்கப்படாத மாவட்டத்தில் உடனடியாக வழங்க உத்திரவாதம் வழங்கியது.
  • ஒப்பந்தகாரர் போட்ட உடன்பாட்டின்படி மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி போனஸ் வழங்கப்பட உத்தரவிடப்படும்.
  • மாவட்ட மட்டத்தில் தனி அதிகாரி நியமிக்கப்படுவார்,

இதுபற்றிய விரிவான சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில 

நிர்வாகத்தால் அனுப்பப்படும்.

தோழமையுடன்!

R.செல்வம்

TMTCLU பொதுசெயலர்  

Thursday, June 11, 2015


ESI  அடையாள அட்டை
ZONE-2, ZONE-3, ZONE-4-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடலூர் பொது மேலாளர் அலுவலகத்தில் ESI அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட முகாம் 16-06-2015 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின் பேரில் ESI நிர்வாகத்தினர் இந்த முகாமை நடத்துகின்றனர். தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர இயலாதவர்கள், இருக்கின்றவர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அடையாள அட்டை பெற்றுக்கொண்ட பின் சேர்த்தல் நீக்கல் செய்ய இயலும். ஏற்கனவே அடையாள அட்டை பெற்று அதில் ஏதேனும் திருத்தும் செய்துகொள்ள விரும்புபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

Thursday, April 9, 2015

முக்கிய செய்தி

v ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் VDA உயர்ந்துள்ளது இதன் மூலம் ரூ.120+133=233 நாளொன்றுக்கு கிடைக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

v 5வருடங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகின்றது . அதன் அடிப்படையில் 2009 ல் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் தற்போது 2015-ல் மாற்றம் செய்யப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் விரைவில்  தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படும். அந்த வகையில் நமது NFTE மாநிலச் சங்கமும், நமது TMTCLU மாநிலச் சங்கமும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது  என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

v செக்யூரிட்டி பணி செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க NFTE மாவட்டச் சங்கமும்,  நமது TMTCLU மாவட்டச் சங்கமும்   உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது விரைவில் செக்யூரிட்டி பணிக்கு உரிய ஊதியம் கிடைக்கும் என நம்புகின்றோம்.


TMTCLU
மாவட்டச் சங்கம்

கடலூர்