ஒவ்வொரு அநீதியைக் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயனால், நீ எனது தோழன்.-சேகுவேரா

Tuesday, November 20, 2018

NFTE - TMTCLU
கடலூர் மாவட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து NFTE TMTCLU  சார்பில் 17.11.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம்  ஒப்பந்தக்காரை உடணடியாக ஊதியம் வழங்க உத்திரவிட்டது . ஒப்பந்தக்காரர்  (20-11-2018 ) இன்று நமது மாவட்டத்தில் அணைத்து தோழர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் 5000 /- வழங்கியுள்ளார்.

இருப்பினும் நமது மாவட்ட சங்கம் முழுமையான ஊதியம் வழங்க வேண்டமென்றும், 2009க்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் எனவும், விடுப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியும் வரும்   22-11-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும், 28-11-2018 அன்று கடலூர் பொது மேலாளர் அலுவலக முன்பாக மாபெரும் தர்ணா நடைபெறும்.

ஆகவே நமது உரிமையை நிலைநாட்டிட!....
ஒன்றுபட்டு போராடிடுவோம்!...
வெற்றி பெறுவோம்!...
         
தோழமையுடன்
NFTE-TMTCLU

                                                          மாவட்டச் சங்கங்கங்கள் 

Saturday, October 27, 2018

ஒரு நல்ல முடிவும்  . . .
அதிர்ச்சியில் புலம்பல்களும் . . .

அன்புள்ள தோழர்களே!   வணக்கம் !..... 

NFTE பேரியக்கத்தின் துணையோடு TMTCLU சங்கம் செம்மாந்து நடக்கிறதுதொடர்ந்து கொள்கை வழியில்தான் நடக்கும்சங்க வேறுபாடு, மாச்சரியங்களால் ஒருபோதும் ஒப்பந்த ஊழியர்களின் நலனுக்குப் புறம்பாய் நடக்காதுஇதனால் நம்முடைய பயணத்தில் புரட்சி, தாவிப் பாய்ச்சல்கள் இல்லாது இருக்கலாம்ஆனால், நிதானமாகநிச்சயமாகஇலக்கை நோக்கி நடைபோடும்இந்த நமது நம்பிக்கை வீண் போகவில்லை.

கடலூர் TMTCLU இயக்கத்தில் புதிய தோழர்கள் இணைந்துள்ளனர்ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்வாழ்த்துக் கூறி வரவேற்போம்!

இது பலமான அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறதுகாரணம் இல்லாமல் இல்லைஇணைந்தவர்களில் குறிப்பிட வேண்டிய ஒருவர், தோழர் பாரதிதாசன்  --  BSNLEU சங்கத்தின் ஒப்பந்த ஊழியர் பிரிவான TNTCWU சங்கத்தின் மாவட்டச் செயலாளர்.  

தோழர் பாரதி 18 ஆண்டு காலம் தான் பொறுப்பு வகித்தச் சங்கத்திற்காகக் கடுமையாகத் துடிப்புடன் உழைத்தவர்பல போராட்டங்களில் ஈடுபட்டவர்அதனால் 5 முறை பணிநீக்கம் செய்யப்பட்டவரும் கூடஆனாலும் தளர்வின்றி ஏற்ற கொள்கைக்காக நின்றவர்.

அவர் மாவட்டச் செயலராய் இருந்து நடத்திய ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாட்டில் BSNLEU சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் P. அபிமன்யு அவர்களே தனது உரையில் மாநாட்டில் கீழ்வருமாறு கூறிப்பிட்டார்:

கடலூர் மாவட்டத்தில்தான் ஒப்பந்த ஊழியர்களுக்குத் தாமதமின்றி சரியாக மாத ஊதியம் வழங்கப்படுகிறதுகடலூர் மாவட்டத்தில்தான் EPF / ESI சந்தா முறையாகப் பிடித்தம் செய்யப்பட்டு அலுவலகத்தில் செலுத்தப்படுகிறதுகணக்கு முறையாகப் பராமரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில்தான் ஆட்குறைப்பு நடைமுறைப் படுத்த வேண்டிய போதும், முறையாக நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில்தான் காண்டிராக்டர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர் மாற்றமின்றி தொடரமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் தோழர் பாரதிதாசனின் உழைப்புஎனப் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

அதே பாரதிதாசனைத்தான் தற்போது அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சமூக ஊடகத்தில் மோசமாகத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் . . .‘ மாவட்டச் செயலாளர் பதவி சுகத்தை இத்தனை ஆண்டுகாலம் அனுபவித்து விட்டு ’  சங்கம் மாறி விட்டாராம்காரணம் பாரதி தோழர்களுடன் நமது சங்கத்தில் இணைந்ததுதான்அகில இந்தியப் பொதுச் செயலாளர் பாராட்டிய – 5 முறை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பழிவாங்குதல்களை ஏற்றதோழர் பாரதிதாசன் எட்டிக்காயாக …    … நமக்கு  ’ ச்சீ.. ச்சீ .. இந்தப் பழம் புளிக்கும். . .’ என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது.

தோழர் பாரதி கடலூர் BSNLEU மாவட்டச் செயலாளரின் போக்கு, சக தோழர்களை மதிக்காத போக்கு, நேர்மையற்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வெளியேறியிருக்கிறார்.  BSNLEU சங்கத்திற்குப் பதவி என்பது பொறுப்பு என்பதாக இல்லாமல் பதவி சுகம் என்றெண்ணுகிறதுஎன்ன செய்ய, தன்னைப் போல எண்ணுகிறது, அவ்வளவுதான்.

பல தலைவர்கள் வந்து பாரதியிடம் சமாதானம் பேசுகிறார்கள்மைக்கில் வர்க்கம் பேசுபவர்கள் நேரில் பேசும் போது சாதியத்தைத் துணைக்கழைப்பதுதான் வேதனைஅது மட்டுமா, அவர்கள் வெளியேறியது கூட பரவாயில்லையாம்ஆனால் நமது NFTE--TMTCLU இயக்கத்தில் இணைந்ததைதான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

NFTE--TMTCLU அமைப்பு, தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கையே கூடாது என்று ஒருநாளும் வாதிட்டதில்லைதவறுக்கு ஏற்ற தண்டனைஅவர்கள் உணர்ந்து திருந்தும்  வகையில் மட்டுமே தண்டனைஇருக்க வேண்டும்எடுத்ததற்கெல்லாம் வேலையை விட்டே நீக்கி விடுவது என்பது அந்த ஊழியனோடு அவனது குடும்பம் , குழந்தைகளையும் தண்டிப்பதாக அமையும்எனவே அந்தக் கடும் தண்டனையைத்தான் எதிர்த்தே வந்திருக்கிறோம்எந்த அமைப்பைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியரையும் வேலையை விட்டு நீக்கி விடுவது என்பதை நாம் ஏற்பதில்லைஅது நம் தலைவர்கள் கட்டி வளர்த்தச் சங்கத்தின் நீண்ட நெடிய மரபே  ஆகும்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒப்பந்த ஊழியர்கள் நலனுக்காக இணைந்து போராட நமது இயக்கம் தயங்கியதே இல்லைதற்போது கூட NFTE மற்றும் BSNLEU மாநிலச் சங்கங்கள் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்தனதாமதமின்றி மாத ஊழியம் வழங்குதல் முதலியன கோரிக்கைகள்கடலூர் மாவட்டத்தில் அத்தகையப் பிரச்சனைகள் இல்லை என்று சொல்லி  கடலூர் BSNLEU மாவட்டச் சங்கம் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டதுஆனால் பிற மாவட்டத் தோழர்களுக்காகவும்  --மாநிலச் சங்கங்களின் அறைகூவலை நிறைவேற்றும் பொருட்டும் நாம் மட்டும் இயக்கம் நடத்தினோம்.

பிரச்சனை இல்லை என்று ஓரம் கட்டிய அதே கடலூர் BSNLEU மாவட்டச் சங்கம் பாரதியும் தோழர்களும் சங்கத்தை விட்டு விலகிய பிறகு அவசர அவசரமாகதாங்கள் விமர்சனம் செய்த அதேமாலை நேர ஒரு மணிநேர தர்ணாவை நடத்தினர்காரணம் , மாநிலச் சங்க அறைகூவலாம், சொல்லிக் கொண்டனர்: எலி எட்டு முழம் வேட்டி கட்டி ஓடுகிறது, நம்புவோம்.

அதுவும் அந்த தர்ணாவில் பெரும் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். BSNLEU மாநிலச் சங்கத் தலைவர், மாநிலச் செயலாளர், மாநிலப் பொருளாளர் மற்றும் TNTCWU  மாநிலச் சங்கத் தலைவர், மாநிலச் செயலாளர், மாநிலப் பொருளாளர் என ஆறு தலைவர்கள் --  பிரச்சனை இல்லாத கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டனர்இதில் பேசியவர்கள் கடலூர் NFTE மாவட்டச் சங்கம் நிரந்தர ஊழியர்கள் பிரச்சனைகளை விட்டு விட்டு, ஒப்பந்த ஊழியர் மீது கவனம் செலுத்துகிறோம் என்று புலம்பல் வேறு.

NFTE சங்க வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்மஸ்தூர்களை ஒன்று திரட்டியது மட்டுமல்ல, அவர்களை நிரந்தரப் படுத்த, நிரந்தர ஊழியர்கள் போராடினர்சாதி, இன, மத வேறுபாட்டிற்கு இடம் தராமல், வர்க்கச் சிந்தனையோடு வளர்ந்த சங்கம் எங்கள் NFTE,  போற்றத்தக்க அதன் தியாகத் தலைவர்களை நன்றியோடு வணங்குவோம்!

நம்முடைய இலக்குத் தொழிலாளர்களின் நலன்எனவேதான் இந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் கோரி BSNLEU சங்கத்தோடு இணைந்து கூட்டாக மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தோம்நிச்சயம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட போனஸ் தொகையைப் பெற்றே தீருவோம்.

சங்கத்தோடு வருத்தம் கொள்கின்ற தோழர்களோடு பேசுவதில் தவறில்லைஅது பொறுப்பான எந்த இயக்கத் தலைமையும் செய்வதுதான்ஆனால் அவதூறு செய்வது என்பதையோ, பட்ட பாட்டைஉழைத்த உழைப்பை இழிவு செய்வது என்பதையோ  ஏற்க முடியாது.   என்ன செய்ய, அது அவர்கள் பண்பு, அவர்கள் பின்பற்றும் வழி.

ஆனால் நாம் கொள்கை வழிப்பட்டவர்கள்இந்தச் சுற்றறிக்கை கூடத் தேவையில்லைதான்ஆனால் நடப்பதை ஊழியர்கள் அறிய வேண்டுமேஅவதூறுகளுக்கு ஒரே பதில் நம்முடைய இயக்கத்தை மேலும் வலிமை உடையதாகச் செய்வதுஅதற்கென உழைப்பதுதான்.

நம்பிக்கையுடன் இணைந்த தோழர்கள் பாரதிதாசன், தேவநாதன், சரவணன், ஸ்ரீராம், மணிகண்டன், முருகன் மற்றும் தொடர்ந்து இணைய இருக்கின்ற தோழர்களையும் மனதார தோழமையுடன் வரவேற்போம்இணைந்து பயணிக்க உறுதி கூறுவோம்வாருங்கள் தோழர்களே நமக்கு இயக்கப் பணிகள் காத்திருக்குஅவதூறுகளைப் புறக்கணித்து மேலும் தோழர்களுக்குத் தெளிவு படுத்துவோம்அவர்களையும் நமது இயக்கத்தில் இணைப்போம்நமது எதிர்காலம் உறுதியாக அமைப்பை உறுதியாக்குவோம்

                         தோழமை வாழ்த்துக்களுடன்,
                                                                         
கடலூர்                                                                   தோழமையுள்ள,
23—10--2018                   M.S. குமார்                   J.கந்தன்          A.S. குருபிரசாத்  
                                                           தலைவர்                    பொருளாளர்            செயலாளர்

                                                                    TMTCLU மாவட்டச் சங்கம்